அருப்புக்கோட்டை அருகே புதிய கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

அருப்புக்கோட்டை அருகே  புதிய கட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டிய அமைச்சர்
X

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு, புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்

அருப்புக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது

அருப்புக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை விழா, அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு, புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சியில் , அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திமுக தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்தது. அப்போது கொரோனா இரண்டாம் அலை எவ்வளவு கொடூரமாக இருந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். அந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கைகளிலிருந்து திமுக அரசின் ஓராண்டு சாதனைப் பட்டியல் தொடங்குகிறது.

தமிழக அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை தடையில்லாமல் பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இங்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய, கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், செயற்பொறியாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!