காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை..!
காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக நடந்த ஆலோசனைக் கூட்டம்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி, பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிக்காக நடைபாதை கடைகள், மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு, பேரூராட்சி சேர்மன் ஆர்.கே. செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். காரியாபட்டி பஸ் நிலையம் விரிவாக்கப் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கான வேலைகளை கடந்த வாரம் தொடங்கிவைத்தார். காரியாபட்டி பேருந்து நிலையத்தை சுற்றி ஏராளமான நடைபாதை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மழை நீர் வடிகால் அமைக்கும் பணி செய்வதற்காக இடைஞ்சலாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்றும், வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் தற்காலிகமாக கடைகள் நடத்துவதற்கும், பயணியர் நிழற்குடை எதிர்புறம். பேரூந்துகள் நிறுத்திச் செல்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மழை நீர் வடிகால் அமைக்க இடையூறாக உள்ள சாலை ஓர ஆக்கிரமிப் புக்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் செந்தில் பேசும் போது:
காரியாபட்டியில் பல ஆண்டுகளாக இடநெருக்கடியில் இருந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. பேரூந்து நிலையம், பயணியர் நிழற்குடையைச் சுற்றியுள்ள நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வியாபாரிகளுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மண்டல துணை தாசில்தார் அழகு பிள்ளை நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பெரிய திருமால், ஆய்வாளர் அழகர் ராஜா விவசாய சங்க தலைவர் அம்மாசி பேரூராட்சி கவுன்சிலர்கள் தீபா, சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu