/* */

மல்லாங்கிணர் சென்னகேசவப் பெருமாள் பங்குனி பெருந்திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5 -ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

மல்லாங்கிணர் சென்னகேசவப் பெருமாள் பங்குனி பெருந்திருவிழா
X

சென்னகேசவ பெருமாள் பங்குனித் திருவிழா: அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

காரியாபட்டி அருகே மல்லாங்கிணர் சென்னகேசவபெருமாள் கோவில் பங்குனி உற்சவம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் அமைந்துள்ள செங்கமலத்தாயார் சமேத, சென்ன கேசவ பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து,10 நாட்கள் நடைபெறும் உற்சவ விழாவில், சுவாமி தினமும் அன்ன வாகனம், சிம்மவாகனம், சேஷ வாகனம்,. கருடவாகனம் அனுமந்த வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.ஏப் .2-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம், 4-ஆம் தேதி சுவாமி கள்ளழகர், மோகினி அவதாரத்துடன். பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 5 -ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர்.

மல்லாங்கிணறு பெருமாள் கோயில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

மல்லன் என்பானின் கிணற்றுப் பகுதியை சுட்டிக்காட்டி எழுந்த காரணப் பெயர் மல்லாங்கிணறு என்றாயிற்று. இவ்வூரில் நடைபெற்ற மேற்பரப்பு தொல்லியல் ஆய்வுகளில் பல முதுமக்கள் தாழிகள் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்ததன் மூலம் சங்க காலம் தொட்டே மக்கள் பெரும் எண்ணிக்கையில் இப்பகுதியில் வாழ்ந்து உள்ளமை உறுதிப்படுகிறது. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி படையல் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி 4 அடி உயரம் உள்ளது. முதுமக்கள் தாழி களையே தாயை தெய்வமாக வணங்கும் மரபு இங்கிருந்து அறியப்படுகிறது.

13 ஆம் பொநூ ஆண்டின் அமைதியான நடுகல் வீரனின் சிற்பமும் இவ்வூரில் கண்டறியப்பட்டுள்ளது..இவ்வூரின் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் உள்ள பொது நூற்றாண்டுக்குப் பின் ஆன 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் ஸ்ரீ விக்கிரம பாண்டீஸ்வரர் உடைய நாயனார் கோயில் என்ற சிவாலயமும் வெண்பூ நாட்டு செம்பனூர் ஆன குண கல்யாண நல்லூர் உடையார் ஸ்ரீ கைலாயம் உடைய நாயனார் கோயில் என்ற சிவாலயமும் குறிப்பிடப் பட்டுள்ளன

Updated On: 31 March 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!