நரிக்குடி அருகே கிடாய் முட்டும் போட்டி: பரிசுகள் வழங்கல்

நரிக்குடி  அருகே கிடாய் முட்டும் போட்டி: பரிசுகள் வழங்கல்
X

கிடா முட்டு போட்டியில் மோதிக்கொள்ளும் கிடாக்கள்.

நரிக்குடி அருகே கிடாய் முட்டும் போட்டியில் வெற்றிபெற்ற கிடாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கிடா முட்டு சண்டை போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில், இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் மதுரை தெற்குவாசல் கிடா முட்டு நண்பர்கள் குழு சார்பாக கிடா முட்டு போட்டி நடைபெற்றது. காலை 10 .30மணிக்கு போட்டி துவங்கப்பட்டது.

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பசீர் அகமது போட்டியை தொடங்கி வைத்தார் . மதுரை, சிவகாசி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 40 க்கு மேற்பட்ட கடா ஜோடிகள் போட்டியில் பங்கேற்றன.

கிடா முட்டு போட்டியில் பங்கேற்க வந்த கிடாய்களை, அரசு கால்நடை துறை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. போட்டியில், பங்கேற்க களத்தில் வந்த கடா ஜோடிகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. 30 முறை முட்டிய கடாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..

விழாவில் இந்திய தேசிய லீக். கட்சி மாநிலச் செயலாளர் ஜஹாங்கீர், பொருளாளர் குத்தூஸ்ராஜா வீரசோழன் ஊராட்சி மன்றத் தலைவர் முகமது சாதிக் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன் முன்னிலையில் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!