திருச்சுழி, திருமேனி நாதர் ஆலய மஹா கார்த்திகை தீப விழா:

திருச்சுழி, திருமேனி நாதர் ஆலய மஹா கார்த்திகை தீப விழா:
X

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்மன் 

திருச்சுழி அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத, திருமேனிநாதர் சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில், மஹா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மஹா தீபம் ஏற்றி திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக, திருமேனிநாதர் மற்றும் துணை மாலையம்மன் உட்பட பஞ்சமூர்த்தி உற்சவ சிலைகளுக்கு திருமஞ்சணம், மஞ்சள் , சந்தனம், விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட 18-க்கும் மேற்பட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்த பிறகு சுவாமி, அம்மன் மற்றும் முருகப்பெருமான மதுரை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் தினேஷ்பாபு ஏற்பாடு செய்த மண்டப படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பனைமர ஓலைகளால் ,சுமார் 15 அடி உயரம் கொண்ட கோபுர வடிவ சொக்கப்பனை உருவாக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனை அக்னிமய லிங்கமாக பாவித்து பக்தர்கள் வணங்கினர்.

சொக்கப்பனை எரிந்து முடிந்ததும் அதிலிருந்து பெறப்படும் கரியை பக்தர்கள் திருநீறாக பூசிக்கொள்வார்கள். இந்த சாம்பலை விளைநிலங்களில் தூவினால், விளைச்சல் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும், வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் வைத்தும் பக்தர்கள் பயன்படுத்துவர்.

பனை ஓலை பச்சையாக இருந்தாலும், தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸ்தேக முக்தி அதாவது இந்த பிறவியிலேயே முக்தி கிடைக்கும் என்பதைக் காட்டுவதற்காகவே சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!