விருதுநகர்: காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
காரியாப்பட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித்தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரூபி சந்தோசம், செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், பேரூராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காரியாபட்டி பேரூராட்சியில் கால்நடை வாரச்சந்தை அமைப்பது என்றும், சிறுவர் பூங்கா அமைப்பது, தாமிரபரணி திட்டத்தின் மூலம் கூடுதலாக குழாய் இணைப்பு வழங்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் மீண்டும் உரம் தயாரிக்கும் பணி செய்யவும், காரியாபட்டியில் 1.50. கோடி மதிப்பீட்டில் மின்மயானம் அமைப்பது, சந்தை திடல் வணிக வளாக கடைகளை பராமரிப்பு செய்வது, காரியாபட்டி செவல்பட்டியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கையகப்படுத்தியுள்ள பேரூராட்சி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பது, மாதந்தோறும் பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் லியாகத் அலி, ராம்தாஸ், முனீஸ்வரி , முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், நாகஜோதி, வசந்தா, செந்தில், தீபா ,சத்தியபாமா, செல்வராஜ், சரஸ்வதி திருக்குமாரி , முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu