/* */

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்: அதிமுக-திமுக கடும் வாக்குவாதம்

காரியாபட்டி ஒன்றியக்குழுக் கூட்டம், தலைவர் முத்துமாரி தலைமையிலும், துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது

HIGHLIGHTS

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்: அதிமுக-திமுக கடும் வாக்குவாதம்
X

காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றியகவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றோர்

காரியாபட்டி அருகே உள்ள தனியார் மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை மூட வலியுறுத்தி யூனியன் கூட்டத்தில் திமுக- அதிமுக கவுன்சிலர்கள கடும் வாக்குவாதம்:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யூனியன் கூட்டத்தில் திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம், தலைவர் முத்துமாரி தலைமையிலும், துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், கவுன்சிலர்களில் விவாதம் தொடங்கியது.

கவுன்சிலர் நாகபாண்டீஸ்வரி (அதிமுக): முடுக்கன்குளம் பகுதியில் தனியார் மருத்துவக்கழிவு ஆலையை மூடக்கோரி நரிக்குடி யூனியன் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது:

தோப்பூர் முருகன்: (அதிமுக) :பொதுமக்களை பாதிக்கும் தனியார் மருத்துவ கழிவு ஆலையை மூடுவதற்கு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அரசகுளம் மணியபிள்ளை கிராமத்துக்கு செல்லும் பாதை அமைக்க யூனியன் நிர்வாகம் முறையாக செய்யவில்லை

துணைத்தலைவர் ராஜேந்திரன்:மருத்துவ கழிவு ஆலையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்வோம்.

கவுன்சிலர் சேகர் (திமுக): மணியபிள்ளை தோட்டத்துக்கு செல்லும் பாதை முறையாகத்தான் போடப்பட்டுள்ளது. அரசாங்கம் போட்ட ரோட்டை தோண்டிய நபர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

தோப்பூர் முருகன் (அதிமுக) : மருத்துவக் கழிவு ஆலை முடுவதற்கு உடனே தீர்மானம் நிறைவேற்றுங்கள். அப்போது, திமுக-அதிமுக கவுன்சிலர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆணையாளர்: உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் திருச்செல்வம் (அதிமுக ) :காரியாபட்டியில் கடுமையான வெயில் அடிக்கிறது டெங்கு காய்ச்சலே இல்லாதபோது மஸ்தூர் பணியாளர்கள் தேவையாதானா.

தோப்பூர் முருகன் (அதிமுக) : யூனியன் பொது நிதியில் மஸ்தூர் பணியாளர்களுக்கு 5 லட்சம் செலவு செய்யப்படுகிறது.

கவுன்சிலர் சேகர் (திமுக) மஸ்தூர் பணியாளர்கள் முறையாக வேலை செய்வதில்லை, மரநிழலில் உட்கார்ந்து பொழுதுபோக்குகிறார்கள். சுகாதார ஆய்வாளர்: மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார மஸ்தூர் பணியாளர்களை தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மஸ்தூர் பணியாளர்கள் மீது புகார் தெரிவித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில், ஆணையாளர் ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 18 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்