காரியாபட்டி மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா

காரியாபட்டி மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல்  திருவிழா
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு கொடிமரம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வரும் 9ந் தேதி காலையில், பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், மற்றும் திருவிளக்குபூஜை நடைபெறும்.

11ந் தேதி சக்தி கரகம் எடுத்தல், 12ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தல், மாலை 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் .விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் திருவிழாவிற்கு காரியாபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆண், பெண் காவலர்கள் சமூக நல்லிணக்கத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் வரை வரி செலுத்தி கோயிலில் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கெடா வெட்டி பொங்கல் திருவிழாவை கொண்டாடினார்கள். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் கிராமிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது