காரியாபட்டி, கபால காளியம்மன் ஆலய வருஷாபிஷேக கோலாகலம்

காரியாபட்டி, அருள்மிகு கபால காளியம்மன்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, செவல்பட்டி ஸ்ரீ கபால காளியம்மன் ஆலய வருஷாபிஷேகம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த காலங்களில் கொரோனா பரவலால் சிறப்பாக இந்த வருஷாபிஷேகம் நடக்கவில்லை. கடந்த ஆண்டும் சுமாரகாகவே நடத்தப்பட்ட இந்த வருஷாபிஷேக விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட கோவில் கமிட்டியினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று வருஷாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விழா கமிட்டியினர் திட்டமிட்டபடி,விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செவல்பட்டி அருகே, உள்ள ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் அம்மனுக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாகாவாஷணம், கலச பூஜை, ஜபம்,பிரத்தியங்கிரா ஹோமம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், ஆகிய சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
இன்று காலை 9 மணியளவில் காரியாபட்டி சுப்பிரமணியர் கோவிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன்பிறகு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது .கோடை வெயில் நேரத்தையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு அம்மனின் ஆசிபெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்த வருஷாபிஷேகத்தில், விருதுநகர் சுற்றுவட்டாரத்தில் இருந்து வண்டிகள் மூலமாகவும், கால்நடையாகவும், வந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு பல இடங்களில் அரசியல் கட்சியினர், நடிகர் மன்ற அமைப்புகள் நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu