அரசு அலுவலக செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்
X
காரியாபட்டி அருகே, அரசு அலுவலகங்களில் செயல்பாடுகளை நேரில் பார்த்து அறிந்த பள்ளி மாணவர்கள்.
By - N. Ravichandran |16 Nov 2023 5:30 PM IST
அறிவோம் - ஆராய்வோம் என்ற திட்டத்தில் காரியாபட்டி அரசு அலுவலகத்தை பார்வையிட்ட கழுவனச்சேரி பள்ளி மாணவர்கள்
காரியாபட்டியில் அரசு அலுவலக செயல்பாடுகளை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு வெளி உலக செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அறிவோம் - ஆராய்வோம் என்ற திட்டத்தின் படி, காரியாபட்டி அருகே கழுவனச்சேரி பள்ளி மாணவர்கள், காரியாபட்டி பத்திரப்பதிவு , காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் வருகை தந்து அங்குள்ள அலுவலக செயல் பாடுகளை பார்த்தனர். மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 நாள் வேலை திட்டம் பயனாளிகள் பதிவேடு, சம்பளம் விவரம் குறித்து கேட்டறிந்தார்கள். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் முனியாண்டி, சுனிதா குமாரி, இளநிலை உதவியாளர் வீரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
காரியாபட்டியில் குழந்தைகள் தின விழா :
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகள்தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளியைதலைமை ஆசிரியர்கள் சகோதரி மெர்சி கரோலின், தாளாளர் மார்க்கெட் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu