/* */

காரியாபட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணி: அமைச்சர் தொடக்கம்

கோடைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் இத்திட்டம் ஏதுவாக இருக்கும் என்றார் அமைச்சர்

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணி: அமைச்சர்  தொடக்கம்
X

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கண்மாய் தூர்வாரும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கண்மாய் தூர்வாரும் பணி. அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், தமிழக அரசு நீர் வளத்துறை சார்பாக, காரியாபட்டி தாலுகா எம். இலுப்பைக்குளம், எஸ். கடமங்குளம், நரிக்குடி ஒன்றியம், களத்தூர், கீழக்கொன்றைக்கும் ஆகிய கண்மாய்களை நீர்வளத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கீடு செகாரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த இலுப்பைகுளம், எஸ்.கடமங்குளம், நரிக்குடி ஒன்றியத்தில் களத்தூர், கீழகொன்றைக்குளம் ஆகிய கண்மாய்களை தூர்வாரும் பணிகளுக்கு 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் காரியாபட்டி தாலுகா எம்.இலுப்பைகுளம் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்து பேசியதாவது: திருச்சுழி தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை மேம்பாடு செய்ய தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்மாய் மேம்பாடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கோடைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் இத்திட்டம் ஏதுவாக இருக்கும் என்றார் அமைச்சர்தங்கம்தென்னரசு..

.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி செயற் பொறியாளர் கலைச்செல்வி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்லம், கண்ணன் பேரூராட்சித்தலைவர் செந்தில் , ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜேந்திரன் , ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி ஈஸ்வரன்,விவசாய ஆத்மா குழு தலைவர் கந்தசாமி வேப்பங்குளம், தண்டீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 March 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...