காரியாபட்டி தொட்டிச்சி அம்மன் கோவிலில் களரி பூக்குழி திருவிழா

காரியாபட்டி தொட்டிச்சி அம்மன் கோவிலில் களரி பூக்குழி திருவிழா
X

காரியாபட்டியில், தொட்டிச்சியம்மன் கோவிலில் வைகாசி களரி பூக்குழி திருவிழா நடைபெற்றது.

காரியாபட்டியில், தொட்டிச்சியம்மன் கோவிலில் வைகாசி களரி பூக்குழி திருவிழா நடைபெற்றது.

காரியாபட்டியில் தொட்டிச்சியம்மன் கோவில் வைகாசி களரி பூக்குழி திருவிழா:

காரியாபட்டியில், தொட்டிச்சியம்மன் கோவில் வைகாசி களரி பூக்குழி திருவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நெடுங்குளம் பணிக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள தொட்டிச்சியம்மன் கோவில் 277ம் ஆண்டு வைகாசி களரி விழா நடைபெற்றது. முதல் நாள் சாமி பெட்டியை எடுத்துக்கொண்டு பூக்குழிக்காக கிராம மக்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த விறகுகளையும் மாட்டுவண்டிகளில் ஊர்வலமாக சாமி ஆட்டத்துடன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு பக்தர்கள் பொங்கல் வைத்து நெய் பணியாரம் சுட்டு தொட்டிச்சியம்மனை வழிபட்டனர். அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் 4 அடி ஆழத்தில் வைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கினர். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!