காரியாபட்டியில் கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு அடையாள அட்டை வழங்கல்

காரியாபட்டியில் கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு அடையாள அட்டை வழங்கல்
X

காரியாபட்டியில் தென்னிந்திய கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

தென்னிந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டது

காரியாபட்டியில் தென்னிந்திய கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தென்னிந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் நல வாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாநிலத்தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார்.

காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் செந்தில், குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பேராசிரியர் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மற்றும் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார்.

காரியாபட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் , உதவி ஆய்வாளர் அசோக் குமார், எஸ். பி. எம். அறக்கட்டளைத் தலைவர் அழகர்சாமி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், தொழிலதிபர் ராமசாமி, மனித பாதுகாப்புக் கழக மாவட்ட ச் செயலாளர் பிரின்ஸ், சிலம்பாட்ட பயிற்சி மைய ஆசிரியர்கள் வில்லி பத்திரி கருப்பசாமி, கோவிலாங்குளம் வெற்றிவேல், சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் முனிராஜ், துணைத் தலைவர் ராமமூர்த்தி, காரியாபட்டி நகர பொறுப்பாளர் ஆர் அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .சங்கநகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு