1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்! சுற்றுசூழல் தின நிகழ்ச்சி!

1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்! சுற்றுசூழல் தின நிகழ்ச்சி!
X

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 1 கோடி 10 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 1 கோடி 10 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காரியாபட்டி. ஜூன். 9

காவேரி கூக்குரல் இயக்கம் இந்த வருடம் 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு ஏற்பாடு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அழகாபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சுழி டி.எஸ்..பி ஜெகநாதன் தலைமை வகித்தார்.

முத்து மாரியப்பன் அவர்களின் தோட்டத்தில், இயற்கை விவசாயி விவேகானந்தன். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. காவேரி கூக்குரல் இயக்கத்தின் விருதுநகர் வேளாண் காடுகள் ஆலோசகர் விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனைப்படி நிகழ்ச்சியில் 2820 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:

காவேரி கூக்குரல் சார்பாக இந்த ஆண்டு 1 கோடி 10 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரங்கள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவருகிறது. காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடும் செயலை செய்து வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கெடுக்கின்றனர். மரம் நடவு தவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசக ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது.

விவசாய நிலங்களில் மரநடவு

தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியை ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரியில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சுமார் 140 விவசாயிகள் தங்களது நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடவு செய்தனர்.

உலக சுற்றுச் சூழல் தினம் தவிர, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்,. நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்து வருகிறது. இவர்கள் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்ப காலத்தில் இருந்து பக்கபலமாகவும், வழிகாட்டிகளாகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலவச ஆலோசனைகள்

காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிர் ஊட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சத்குரு அவர்களால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வது, எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும், என்னென்ன ஊடுபயிர்கள் செய்யலாம் என்பது போன்ற மரவிவசாயம் சார்ந்த முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்.

விவசாயிகளுக்குத் தொழில் வாய்ப்பு

விவசாயிகள் பொருளாதாரம் மேம்படும் வகையில் மரக்கன்று உற்பத்தி மற்றும் விநியோகத்திலும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை காவேரி கூக்குரல் வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஈஷா நாற்றுப் பண்ணைகள் இல்லாத மாவட்டங்களில் விவசாயிகள் நாற்றுப்பண்ணை துவங்கி 18 இடங்களில் நாற்று உற்பத்தியும், 13 இடங்களில் நாற்று வினியோகமும் செய்து வருகின்றனர். இதற்கான அனைத்து உதவிகளையும் காவேரி கூக்குரல் வழங்கிவருகிறது.

குறைந்த விலையில் மரக்கன்றுகள்

மேலும் அனைத்து ஈஷா நாற்றுப் பண்ணகைளிலும் விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு மிகக்குறைந்த விலையிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறியவும், மரக்கன்றுகள் தேவைக்கும் விக்னேஸ்வரன் விருதுநகர் 70103 ௬௮௯௯௩ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!