காரியாபட்டியில், காலநிலை மாற்ற கண்காணிக்க சிறப்பு கூட்டம்!

காரியாபட்டியில், காலநிலை மாற்ற கண்காணிக்க சிறப்பு கூட்டம்!
X

காரியாபட்டியில் காலநிலை கணக்கெடுப்பு கண்காணிப்பு கூட்டம்.

காரியாபட்டியில், காலநிலை மாற்ற கண்காணிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின காலநிலை மாற்ற செயல் பாடுகளுக் கான திட்ட கண்காணிப்பு கூட்டம்: திருச்சுழியில் நடைபெற்றது:

காரியாபட்டி , ஏப்,: 10 .

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் காலநிலை மாற்ற செயல்பாடுகளுக்கான திட்ட கண்காணிப்பு கூட்டம் திருச்சுழியில் நடை பெற்றது. மத்திய அரசின் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் (யூ. என். டி.பி கீழ் சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப் பிற்கான தரிசு நில விவசாய மேம்பாட்டு திட்ட கண்காணிப்பு கூட்டம் திருச்சுழியில் ஸ்பீச் நிறுவன வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில், ஸ்பீச் நிறுவன இயக்குநர் பொன்ன முதன் தலைமை வகித்தார். நிதி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார். விடியல் நிறுவனத்தின் நிறுவனர் காமராஜ் திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கவுரை யாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை ஒன்றியம், கட்டங்குடி, செம்பட்டி, ஊராட்சிகளில் 640 ஹெக்டர் நிலத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், விவசாயி களுக்கு தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்த திட்ட மிடப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில், யு. என்.டி.பி. திட்ட முதன்மை இயக்குநர் திபாங்கர் சகாரியா, தேசிய ஒருங்கிணை ப்பாளர் மனிஸ் பாண்டே, மேசவரம் விவசாய உற்பத்தி யாளர் நிறுவன தலைவர் செல்வம், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் ஜெய்கர் ஆனந்த், ரிலையன்ஸ் பவுண்டேசன் மாவட்ட திட்ட மேலாளர் ஶ்ரீகிருபா, பஞ்சாயத்து தலைவர்கள் மகாலட்சுமி, தனலட்சுமி மண்டல வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ரவிச்சந்திரன், ஸ்பீச் மக்கள் தொடர்பாளர் பிச்சை ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள். விடியல் நிறுவன இயக்குநர் வினோபாலாஜி நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!