ராஜபாளையத்தில் பலத்த மழை: வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி காயம்

ராஜபாளையத்தில் பலத்த மழை:  வீட்டின் மேற்கூரை  இடிந்து மூதாட்டி காயம்
X

இராஜபாளையத்தில் தொடர்ந்து நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

ராஜபாளையத்தில் பலத்த மழையில், வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி காயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தோப்புபட்டி தெருவைச் சேர்ந்தவர், பிள்ளையார் வயது 67. இவரது மனைவி ராக்கம்மாள் வயது 63. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிள்ளையாரும், ராக்கம்மாள் இருவரும் தனியாக சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில், ராக்கம்மாள் தலையில் மற்றும் தோள்பட்டையில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வயதான காலத்தில் வீடு மேற்கூரை இடிந்து விழுந்ததால், தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் முதியோர், தங்களூக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!