காரியாபட்டி வட்டாரத்தில் பசுமை தமிழகம் திட்டம் தொடக்கம்

காரியாபட்டி வட்டாரத்தில் பசுமை தமிழகம் திட்டம் தொடக்கம்
X

காரியாபட்டி அருகே பசுமைத் திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத் திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

காரியாபட்டி ஒன்றியத்தில் பசுமை கிராம திட்டம் அச்சங்குளத்தில் துவங்கப்பட்டது:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் , பிசிண்டி ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக அச்சங்குளம் கிராமத்தில் பசுமை கிராம திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவுக்கு, ஒன்றியக்குழுத்தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட க்கவுன்சிலர் தங்கதமிழ் வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி,ஒன்றியக் கவுன் சிலர் உமை ஈஸ்வரி, கிரின் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், சட்ட ஆலோசகர் செந்தில்குமார் ஆத்மா திட்ட குழு தலைவர் கந்தசாமி கனிமவள நீர்வள பாதுகாப்பு விவசாய சங்கத்தலைவர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, பிசிண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

தமிழ்நாடு மாநிலம் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31 ஆயிரத்து 194 சதுர கிமீ பரப்பளவு ( மொத்த பரப்பில் 23.98 சதவீதம்) மட்டுமே பசுமை போர்வை உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம், அதாவது தமிழகத்தில் 42 ஆயிரத்து 919 சதுர கிமீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



Tags

Next Story