காரியாபட்டியில் முதியவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

காரியாபட்டியில் முதியவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
X

காரியாபட்டியில், முதியோர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

காரியாபட்டியில் முதியவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

அக்டோபர் 1 ம்தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் முதியோர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி எஸ் பி எம் டிரஸ்ட் மற்றும் மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் இணைந்து காரியாபட்டி எஸ் .பி. எம். மருத்துவமனையில் முதியோர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம் முகாமுக்கு, பேரூராட்சி தலைவர் ஆர் கே செந்தில் தலைமை தாங்கினார் .ஜெயா ராஜகோபால் , பேரூராட்சி துணை தலைவர் ரூபி சந்தோசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . எஸ். பி. எம். அறக்கட்டளை நிறுவனர் எம் அழகர்சாமி வரவேற்றார் .

முகாமில், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜெயந்தி கிஷோர், பொது மருத்துவர் டாக்டர் ஹரிஷ் ஆகியோர் சுபா 100-க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை ( ரத்த அளவு , ரத்தத்தில் உப்பின் அளவு , சர்க்கரை அளவு மற்றும் ஏனைய பரிசோதனைகள் ) செய்து இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர் .

காவல்துறை சார்பு ஆய்வாளர் பிச்சை பாண்டி , ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் , கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ..

எஸ் .பி.எம் . மருத்துவமனை பணியாளர்கள் பாண்டியம்மாள், சந்திரா ,ஜெயராணி ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் சாய் பாபா பாரா மெடிக்கல் நர்சிங் இன்ஸ்டிட்யூட் மாணவியர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!