காரியாபட்டியில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
காரியாபட்டியில் நடைபெற்ற இ-சேவை மையத்திறப்பு விழா
காரியாபட்டியில் 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் அசேபா நிறுவனம் சார்பாக நடைபெற்றது.
காரியாபட்டியில் 108 பேருக்கு இலவச திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அசேபா நிறுவனம் சார்பாக , 108 ஜோடிகளுக்கு சர்வமத இலவச திருமணம் அன்னபூரணி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.. விழாவுக்கு, அசேபா நிர்வாக இயக்குனர் லோகநாதன் தலைமை வகித்தார்.
தலைவர் சந்திர பால் முன்னிலை வைத்தார். வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமம் நிறுவனர் அழகர் ராமானுஜம், பிஷப் பீட்டர் ரெமிஜியஸ், மதுரை காதர்மைதீன் ஆகியோர் முன்னிலையில், 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, உலக நலனுக்காகவும் மண்வளம் காக்கவும் பெண்மையை போற்றும் வகையில் அன்னபூரணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில், திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்கு சீர்வரிசை மற்றும் விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தோணுகால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், டாக்டர் சாரல் தங்கம், சர்வ சேவா பள்ளிகள் இயக்குனர் வசந்தா . நடராஜன், உலகநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அசேபா திட்டப் பணியாளர்கள் செய்தனர்.
காரியாபட்டி கல்குறிச்சியில் தமிழக அரசின் இ.சேவை மையம் திறப்பு.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் அமல ரத்த பரிசோதனை மைய வளாகத்தில், தமிழக அரசு இ.சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, விருதுநகர் தபால்நிலைய மக்கள் தொடர்பாளர்பால்ச்சாமி தலைமை வகித்தார்.
இ. சேவை மைய நிர்வாகி முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, இ.சேவை மையத்தை திறந்து வைத்தார். விழாவில், மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ், சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் மகேஸ்வரி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார்,கிராம நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், மணிபாரதி, மணிமுத்து மற்றும் சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu