திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம்

திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான  இலவச பொது மருத்துவ முகாம்
X

திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ஸ்பீச் நிறுவனம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக திருச்சுழி அருகே மேல கண்டமங்களம் நூற்பு ஆலையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜெயவிலாஸ் நூற்பாலை மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஸ்பீச் நிதி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார் .

முகாமில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் சங்கர் குழுவினரால் தொழிலாளர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை, ஸ்பீச் மக்கள் தொடர்பாளர் பிச்சை, திட்ட மேலாளர் ஜெயபிரகாஷ், களப்பணியாளர்கள் கீதா, சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!