நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம்
அருப்புக்கோட்டை அருகே நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் - இளம் தொழிலாளர்கள் மீட்டெடுத்தல் திட்டம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக, அருப்புக்கோட்டை அருகே மேலக் கண்டமங்களம் தனியார் நூற்பாலையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நூற்பாலை, நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் முகாமினை, தொடங்கிவைத்தார். முகாமில்,
300 க்கு மேற்பட்ட மில் தொழிலாளர் களுக்கு சர்க்கரை,இரத்த அழுத்தம், கண்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பெண்களுக்கான குடும்பநல மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில்,நூற்பாலை மனித வள மேம்பாட்டு அலுவலர் செல்வராஜ், ஸ்பீச் மக்கள் தொடர்பாளர் பிச்சை, திட்ட மேலாளர் சுதா, களப் பணியாளர்கள் ராஜமாணிக்கம், பஞ்சாமிர்தம் , பரமேஸ்வரி, சுந்தரி, சமயக்காள் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu