காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

காரியாபட்டியில், நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்.

முகாமில் 300க்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் டி.எம்.பி பவுண் டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, இலவச கண் மருத்துவமுகாம் நடைபெற்றது.

டி.எம்.பி பவுன்டேசன் நிர்வாக அதிகாரி சவுந்திரபாண்டியன் முகாமிற்கு தலைமை வகித்தார்.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் இரத்தின பிரபு, முன்னிலை வகித்தார். காரியாபட்டி செயின் மேரிஸ் பள்ளி முதல்வர் இமாக்குலேட் முகாமினை, தொடங்கி வைத்தார். முகாமில், 300க்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கண் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்படும் பொதுவான நோய்களின் பட்டியல் கண்புரை, கண்ணீர் குழாய் அடைப்பு,கண் துருத்தம்,கண் கட்டிகள்,நீரிழிவு விழித்திரை நோய் உலர் கண் நோய்க்குறி,கண் அழுத்த நோய்,விழிப்புள்ளிச் சிதைவு,ஒளிவிலகல் பிழைகள், மாறுகண் (கண்களின் தவறான அமைப்பு அல்லது விலகல்),கருவிழிப்படல அழற்சி ஆகிய நோய்கள் உள்ளன.

கண் பரிசோதனையின் போது செய்யப்படும் பரிசோதனை முறைகள்:உள்விழி அழுத்தத்தை தீர்மானிக்க கண் அழுத்த அளவி, ஒளிவிலகல் மதிப்பீடு,விழித்திரை பரிசோதனை,பிளவு விளக்கு பரிசோதனை,பார்வைத் திறன் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil