தமிழக முன்னாள் அமைச்சர் நினைவு நாள்: அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் அஞ்சலி

தமிழக முன்னாள் அமைச்சர் நினைவு நாள்: அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் அஞ்சலி
X

முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவுதினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் அமைச்சர் வே. தங்கப்பாண்டிய னின் நினைவு நாளையொட்டி அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் அஞ்சலி செலுத்தினர்

காரியாபட்டி அருகே, மல்லாங் கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவுதினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கப் பாண்டியனின். 26 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மல்லாங் கிணறில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டிய முத்துராமலிங்கம்,.

காரியாபட்டி ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் ,செல்லம், பேருராட்சித் தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர். சிவசக்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் வாலை.முத்துச்சாமி, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், சங்கர், முனிஸ்வரி, தீபா. உட்பட பலர் அமைச்சர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

வே. தங்கபாண்டியன் (இறப்பு: ஜூலை 31, 1997).இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து, தி.மு.க சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரது வாரிசுகளான தங்கம் தென்னரசு தற்போதைய திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சாரகவும், தமிழச்சி தங்கப்பாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!