காரியாபட்டி அருகே கலையரங்கத் தை திறந்து வைத்த நிதி அமைச்சர்

காரியாபட்டி அருகே கலையரங்கத் தை திறந்து வைத்த நிதி அமைச்சர்
X

காரியாபட்டி அருகே கல்லுப்பட்டியில், கலையரங்கத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார் 

கற்றலில் இனிமை துவக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், கல்லுப்பட்டியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய கலையரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சி த் தலைவர் செந்தில் , மாவட்ட க்கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டியில் முதல்வரின் காலை உணவு திட்டம்... கற்றலில் இனிமை துவக்கப் பள்ளியில் ,தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக கட்சி பிரமுகர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்க வும். ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 ன் கீழ் சில மாநகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதற் கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேலைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வரால் 16.09.2022 அன்று மதுரையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும் கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள நற்பயனை கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 13.01.2023ம் நாளிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகைகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!