காரியாபட்டி அருகே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி அருகே கல்லுப்பட்டியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்.
காரியாபட்டி அருகே பள்ளி மாணவர் களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ். கல்லுப்பட்டி ஊராட்சி மன்றமும் ,மதுரை வேளாண்மை கல்லூரி காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் மற்றும் சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .
ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பெரியசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமைகள் , குறித்தும் மரம் வளர்ப்பதன், அவசியம் குறித்து மாணவர்களுக்கு கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன் ராம் சமுத்திரம் அறக்கட்டளை நிறுவனர் மங்களேஸ்வரி ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் மதுரை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள், முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
மேலும், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைக்கப் பட்டது. ஆசிரியர் சந்தான கிருஷ்ணன், கிரீன் பவுண்டேசன் சட்ட ஆலோசகர் செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சமுத்திரம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராஜா, மக்கள் தொடர்பாளர் அருண்குமார், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர் கனி சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, மகளிர் குழுத் தலைவர் முனியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu