விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி
X

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி அருகே  ஆவியூர் கிராமத்தில்  நடைபெற்ற மண்புழு உரம்தயாரிப்பு பயிற்சி முகாம்

விருதுநகர் அருகே காரியாபட்டியில் விவசாயிகளுக்கு மண்புழுஉரம் தயாரிக்கும் பயிற்சியளிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி அருகே , ஆவியூர் கிராமத்தில் , ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று வரும் ,மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, இளங்கலை இறுதியாண்டு வேளாண் மாணவிகள் எஸ்.வாசந்தி, ப.சிவஷாலினி, செ.சௌந்தர்யா, என்.ஸ்ரியா, பா.சுகிபிரபா ஆகியோர் மண்புழு உரம் குறித்து விவசாயிகளுக்கு ப விளக்கினர்.

மண்புழு உர தயாரிப்பு, மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம், மற்ற உரங்களோடு ஒப்பிடுகையில் மண்புழு உரம் கொண்ட நன்மைகள் ஆகியவற்றை விளக்கி மக்களிடையே மண்புழு உரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விவசாயிகள் ஆர்வத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும், தங்கள் சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!