காரியாபட்டியில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான மருத்துவ பரிசோதனை
காரியாபட்டியில், வாகன ஓட்டிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
Drivers Free Medical Camp
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு வாரம் சாலை பாதுகாப்பு வார விழாவானது கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாட்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் என நடத்தப்படுவது உண்டு. மேலும் வாகனஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களையும் தன்னார்வலர்கள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் வழங்குவதுண்டு. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் இதனை போக்குவரத்து காவல்துறையானது சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் காரியாப்பட்டியில் போலீஸ் துறை சார்பில் வாகனஓட்டிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் ஆவியூர் சோதனை சாவடியில் நடை பெற்றது.
வாகன ஓட்டிகளுக்கு ரத்த அழுத்தம், சக்கரை நோய் மற்றும் கண் பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப் பட்டது.
வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து செல்ல வேண்டும் எனவும், அதிவேகமாக செல்லக்கூடாது எனவும், கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என, காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.. முகாமில், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், சார்பு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu