காரியாபட்டியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்
காரியாபட்டியில், திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
Dmk IT Wing Meet
தமிழகத்தில் வரும் மே மாதத்திற்குள் லோக்சபா தேர்தலானது நடக்க உள்ளது. இதனால் இதற்கான ஆயத்த வேலைகளை அனைத்துக் கட்சிகளும் இப்போதிருந்தே துவங்கி விட்டனர்.ஒவ்வொரு கட்சியிலும் நிர்வாக அமைப்பின் சார்பில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப அணி என்பது அனைத்து கட்சியிலும் ஒரு பிரிவாக உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து பிரிவினரும் தத்தம் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய துவங்கி விட்டனர். அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அளவிலான தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்டம் ,
திருச்சுழி தொகுதி அளவிலான தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஆலோசனைக்கூட்டம், பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு ,திருச்சுழி தொகுதி அமைப்பாளர்கள் மனோஜ் பிரபாகர், மற்றும் .யுவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. கூட்டத்தில், பேரூராட்சி த்தலைவர் ஆர்.கே. செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.. கூட்டத்தில், சென்னையில் நடைபெறும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வலைய தளங்களில் தகவல் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப் பட்டது.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம்.. நகர அமைப்பாளர் குருசாமி, அஸ்வின், பானு , காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன் சரஸ்வதி பாண்டியராஜன்,மாவட்ட ப்பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில் ராஜன் வார்டு செயலாளர் சங்கரேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். ..
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu