காரியாபட்டியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

காரியாபட்டியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X

 விருதுநகர் வடக்கு மாவட்டம் ,காரியாபட்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முடுக்கங் குளம் கிராமத்தில் நடைபெற்றது.

அதிக உறுப்பினர் சேர்ப்பவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி உடன்பிறப்பாய் இணைவோம் இயக்கம் மூலம் அதிக உறுப்பினர் சேர்ப்பவர்களுக்கு 10 ஆயிரம் பரிசு வழங்கப்படுமென காரியாபட்டி தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விருதுநகர் வடக்கு மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முடுக்கங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரசாமி தலைமை வகித்தார் .ஒன்றியச் செயலாளர் செல்லம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி பேசும்போது, முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு விழா தொடக்கம், திமுக பவள விழா ஆண்டை முன்னிட்டு உடன்பிறப்பாய் இணைவோம் இயக்கம் மூலம், ஏப்ரல் 3 முதல் ஜூன் 3 வரை திமுகவின் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே விருதுநகர் வடக்கு மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் கந்தசாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள சேகர், சிதம்பர பாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india