காரியாபட்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

காரியாபட்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
X

காரியாபட்டியில் நடைபெற்ற  தி.மு.க பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

வாக்குசாவடி மையங்களில் பணியாற்றும் பொறுப்பாளர்கள் வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ். மறைக்குளம் மையம் சார்பாக தி.முக. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலரும் மைய பொறுப் பாளருமான தங்க தமிழ்வாணன், பூத் கமிட்டி விண்ணப்ப படிவங்களை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில், வாக்குசாவடி மையங்களில் பணியாற்றும் பொறுப்பாளர்கள் வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள், பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், மறைக்குளம். சித்தனேந்தல் , வேப்பங்குளம், இலுப்பகுளம்,, தொட்டியங்குளம், குண்டு குளம். கம்பாளி, துலுக்கன்குளம் செட்டி குளம், உடுப்பு குளம் தாமரைக்குளம், எசலி , ஆவரம்பட்டி காஞ்சரங்குளம், குறிஞ்சாக்குளம் தேனூர், சூரனூர், உவர் குளம், கூவர் குளம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து கிளைக் கழக நிர்வாகிகள். பங்கேற்றனர்.

கூட்டத்தில், அவைத் தலைவர் மகேந்திரசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் இலுப்பகுளம் கந்தசாமி, தமிழ் செல்வி செல்லப்பா, துலுக்கன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வாசுதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமு வேப்பங்குளம் தண்டீஸ்வரன், மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்