காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X
கீழகள்ளிகுளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பிக்குடி ஊராட்சியில், சுரங்கம் மற்றும் கனிமவள நிதியிலிருந்து ரூ.3.18 கோடி மதிப்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளையும்,பாப்பனம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.13.65 இலட்சம் மதிப்பில் 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும்,

வி.நாங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பிலான புதிய கிராம ஊராட்சி செயலகக் கட்டடம் கட்டும் பணிகளையும்,முடுக்கன்குளம் முதல் செக்கனேந்தல் வரை பிரதமமந்திரி கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.156.33 இலட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், துலுக்கன்குளம் ஊராட்சியில், இண்டஸ் வங்கி, பிரதான் அறக்கட்டளை மற்றும் மக்கள் பங்களிப்புடன் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் கீழகள்ளிகுளம் கண்மாயில் தூர்வாரும் பணியினையும், மதகு சரிசெய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, செயற் பொறியாளர் இந்துமதி, மாவட்ட ஊராட்சி செயலர் / மண்டல அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ்,உதவி பொறியாளர்கள் காஞ்சனாதேவி,ராஜ்குமார்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள்மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil