காரியாபட்டியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்

காரியாபட்டியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
X

காரியாபட்டியில், வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

காரியாபட்டி பேரூராட்சியில், 4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார்:

காரியாபட்டி பேரூராட்சியில், 4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில், பஸ் நிலையம் விரிவாக்கம், மழைநீர் வடிகால், குடிநீர் திட்டம், சிறுபாலங்கள் போன்ற திட்டங்களை அமைக்க தமிழக அரசு 4 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி காரியாபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ஆர்.கே.செந்தில் தலைமை வகித்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்ச்சியில் ,பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம் , கவுன்சிலர்கள் லியாகத் அலி,முனீஸ்வரி, சங்கரேஸ்வரன், சரஸ்வதி, முகமது முஸ்தபா, தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!