கிராம நிர்வாக அலுவலர் தாக்கப் பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
வி.ஏ.ஒ. தாக்கப்பட்டதைத் கண்டித்து வருவாய்த்துறையினர் அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய சம்பவத்தை கண்டித்து, வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, எஸ். கல்லுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் சட்டநாதன். இவர், கடந்த 19ந் தேதி கல்லுப்பட்டி கிராமத்தில் பிரபாகரன் நிலத்தை சர்வே செய்துகொண்டிருந்தார். அப்போது, பரமசிவம் என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சட்டநாதனோடு தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பந்தபட்ட நபர் மீது சட்டநாதன் கொடுத்த புகாரின்பேரில், காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சம்பந்தபட்ட குற்றவாளியை கைது செய்ய கோரி, வருவாய்துறை அலுவலர்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத் தலைவர் தெய்வமணி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார்.மாநில அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி சிவனாண்டி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் அழகர், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், நில அளவை ஒன்றியம் கார்த்திகேயன் | ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu