காரியாபட்டி புறவழிச்சாலையில் அரசுப்பஸ்கள் நின்று செல்ல ஆட்சியர் உத்தரவு:

காரியாபட்டி புறவழிச்சாலையில் அரசுப்பஸ்கள் நின்று செல்ல ஆட்சியர் உத்தரவு:
X
மதுரையில் இருந்தும், திருச்செந்தூரிலிருந்து செல்லும் பேருந்துகள் காரியாபட்டி பைபாஸில் உள்ள மங்களம் ஹோட்டல் முன்பு பயணிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் இருந்தும், திருச்செந்தூரிலிருந்து செல்லும் பேருந்துகள் காரியாபட்டி பைபாஸில் உள்ள மங்களம் ஹோட்டல் முன்பு பயணிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர், மதுரை, திருச்செந்தூர் செல்லும் அரசு பேரூந்துகள் காரியாபட்டி நகருக்குள் வந்து செல்லாமல், பை பாஸ் சாலையில் சென்றுவந்தன. விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை யில் நடை பெற்றது.

கூட்டத்தில், கலந்து கொண்ட காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில் பேசும்போது :

காரியாபட்டி பகுதி மக்கள் திருச்செந்தூர் செல்வதற்கு பேருந்துகள் நகருக்குள் வந்து செல்லாததால் பை-பாஸ் சாலை(கள்ளிக் குடி விலக்கு ரோடு) மங்களம் உணவகம் அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முறையாக திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் காரியாபட்டி பைபாஸ் உள்ள மங்களம் ஹோட்டல் முன்பு நின்று செல்ல வேண்டும் என்று அரசு பேருந்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!