காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன்

பள்ளி மேலாண்மை குழுவின் நடப் பாண்டிற்கான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வரலொட்டியில் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், விரிவாக கலந்து ஆலோசித்து தேவையான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, அப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை, ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி)... தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி, கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள்கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. அத்துடன், பள்ளிகளில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமையில் எஸ்எம்சி கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் ‘பள்ளி மேலாண்மை குழு கூட்டம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும். அந்த அடிப்படையில் வரும் மாதத்தில் இக்கூட்டம், பிப்.3-ஆம் தேதி நடைபெறும். இதே நடை முறைதான் இனி மாதந்தோறும் தொடரும். அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் நலத் உதவித் திட்டங்கள், கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பெற்றோர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்.எம்.சி) மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவும் நமக்கு நாமே திட்டம் போல்தான். மக்கள் பங்களிப்போடு அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம். எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

,

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!