விருதுநகர் அருகே குழந்தைகள் தினவிழா பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் அருகே குழந்தைகள் தினவிழா பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

காரியாபட்டி ஆவியூர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது.

காரியாபட்டி ஆவியூர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது.

விருதுநகர் அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.எம்.எம்.எஸ்.எஸ். சைல்டடு லைன் துணை மையம் மற்றும் மாவட்ட பாதுகாப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் முகாம் காரியாபட்டி ஆவியூர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி ரவி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை வகித்தார்.

மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் இந்திரா சிறப்புரையாற்றினார். முகாமில், குழந்தைகள் பாதுகாப்பு கட்டங்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், அரசு வழங்கும் நலத்திட்டங்கள், கல்வி சலுகைகள் குறித்து பேசப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் சைல்டுலைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொருட்செல்வி கார்த்திக் ராஜா, ஞானம் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!