காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
X

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை ,காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் வழங்கினார்.

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

காரியாபட்டியில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை சுரபி நிறுவனம் வழங்கியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை சார்பாக, புத்தாண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சுரபி உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு போலீஸ் சப்.இன்ஸ் பெக்டர் பா. அசோக் குமார் தலைமை வகித்தார். சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

காரியாபட்டி சாதனா கம்ப்யூட்டர் மையத்தில், 6 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சப்.இன்ஸ் பெக்டர் அசோக் குமார் சான்றிதழ்கள் வழங்கி, சிறப்புரை யாற்றினார்.சுரபி நிறுவனர் விக்டர், வழக்கறிஞர் செந்தில், காவலர் வீரணன் , கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் , உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் நல்லம்மாள், சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளி ஆசிரியை, சிவகாமி நன்றி கூறினார்.

தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழா தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil