காரியாபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை:4 பேர் கைது

காரியாபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை:4 பேர் கைது
X

காரியாபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலையைக் கடத்தி வந்த கார் மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. 

Banned Tobacco Sales 4 Persons Arrested காரியாபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து. கடத்தி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Banned Tobacco Sales 4 Persons Arrested

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கையால் 4 பேர் கைது செய்ப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின்பேரில் , சப்.இன்ஸ் பெக்டர்கள் அசோக்குமார், சுப்பிரமணியம், ஷமீலா பேகம் மற்றும் போலீசார் . திருச்சுழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்த போது, காருக்குள் புகையிலை பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் புகையிலை பொருட்களை புதுப்பட்டி கிராமத்தில் ஒரு கடைக்கு விற்பனை செய்ய வந்தவர்கள்என்று, தெரிய வந்தது. உடனடியாக போலீசார் புதுப்பட்டிக்கு சென்று பாலச்சந்திரன் என்பவர் கடையை சோதனை செய்து அங்கு பதுக்கி வைத்திருந்த புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். 75 ஆயிரம் மதிப்புள்ள கணேஷ் புகையிலை, 26 ஆயிரத்து 676, மதிப்புள்ள கூல் லிப் என்ற குட்கா ,12 ஆயிரம் மதிப்புள்ள விமல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரொக்கப் பணம் மற்றும் சரக்கு கொண்டுவந்தகாரும் பறிமுதல்செய்யப் பட்டது

தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டுவந்த மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன், ஒத்தக்கடையை சேர்ந்த மணிகண்டன் கடையில் வைத்து விற்பனை செய்த பாலச்சந்திரன் அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். மேலும் ,மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் முன்னிலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!