காரியாப்பட்டி அருகே மரங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
சத்திரம் புளியங்குளம் கிராமத்தில் மரங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் , காரியாபட்டி வட்டம் , சத்திரம் புளியங்குளம் கிராமத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வரும், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் எஸ்.வாசந்தி, ப.சிவஷாலினி, செ.சௌந்தர்யா, என்.ஸ்ரீரியா, பா.சுகிபிரபா ஆகியோர் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர்.
அவ்வகையில், மலை வேம்பு, சந்தனம், மகாகனி முதலிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு, மாணவியர் எடுத்துரைத்தனர். மேலும் ஊர்மக்கள் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உலக தண்ணீர் தினத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலத்தடி நீர் சேகரிப்பு பற்றி உரையாற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu