சேது பொறியியல் கல்லூரியில் வாகன வடிவமைப்பு பந்தயப் போட்டி

சேது பொறியியல் கல்லூரியில் வாகன வடிவமைப்பு பந்தயப் போட்டி
X

 சேது பொறியியல் கல்லூரி இன்ஜினியரிங் துறை மற்றும் இஸ்னி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற  தேசிய அளவிலான வாகன வடிவமைப்பு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

தேசிய அளவிலான வாகன வடிவமைப்பு பந்தய போட்டி சேதுபொறியில் கல்லூரியில் நடைபெற்றது:

காரியாபட்டி அருகே சேதுபொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான வாகன வடிவமைப்பு மற்றும் பந்தயம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி இன்ஜினியரிங் துறை மற்றும் இஸ்னி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக தேசிய அளவிலான வாகன வடிவமைப்பு மற்றும் பந்தய போட்டிகள் துவக்கவிழா நடைபெற்றது.

கல்லூரித்தாளாளர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். டேபே இந்தியா நிறுவன பொதுமேலாளர் ராகவன் போட்டியை தொடங்கி வைத்தார. நிகழ்ச்சியில் ,பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் தாங்கள் தயார் செய்த வாகனங்களுடன் போட்டியில் பங்கேற்றனர்.நிகழச்சியில் ,கல்லூரி முதல்வர் செந்தில்குமார் , இணை நிர்வாக இயக்குனர் சீனி முகைதீன் மரைக்காயர், நிர்வாகிகள், நிலோபர் பாத்திமா, நாசியாபாத்திமா, துணை முதல்வர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture