காரியாபட்டியில், எழுது பொருள் வழங்கும் விழா

காரியாபட்டியில், எழுது பொருள்  வழங்கும் விழா
X

எழுது பொருள் வழங்கும் விழா நடந்தது.

காரியாபட்டியில், எழுது பொருள் வழங்கும் விழா நடந்தது.

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேசன் சார்பாக, பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரியாபட்டி வழக்கறிஞர் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை ஆத்மா திட்டத்தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி சாதனங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பவுண்டேசன் திட்ட அலுவலர் ராஜு மென் பொறியாளாளர் சிவசங்கரன், கருப்பசாமி , சந்துரு உட்பட பலர் கலந்துகொண்டனர். பவுண்டேசன் அறங்காவலர் சாவித்திரி நன்றி கூறினார்.

Next Story
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!