காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

காதல் திருமணம்  செய்த இளம் பெண் தற்கொலை
X
அருப்புக்கோட்டையில், காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஆயரங்கண் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (25). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தினமும் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன், பிரியதர்ஷினி போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் நீண்ட நேரம் கணவர் கார்த்திக்கிடம் பேசிய பிரியதர்ஷினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, பிரியதர்ஷினி உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் மட்டும் ஆவதால், இது குறித்து ஆர்.டி.ஓ கல்யாண்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!