ஊராட்சி ஒன்றிய பொறுப்புத் தலைவர் நியமனம்: ஆட்சியர் உத்தரவு

ஊராட்சி ஒன்றிய பொறுப்புத் தலைவர் நியமனம்: ஆட்சியர் உத்தரவு
X

நரிக்குடிஒன்றியக்குழு பொறுப்பு தலைவராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

நரிக்குடி ஒன்றியக்குழு பொறுப்பு தலைவராக ரவிச்சந்திரன் என்பவரை ஆட்சியர் நியமனம் செய்தார்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியக்குழு பொறுப்பு தலைவராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் .

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பஞ்சவர்ணம் இருந்து வந்தார் .கடந்த மார்ச் 3 ந் தேதி ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பஞ்சவர்ணத்தை கடந்த ஜூன் 13ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது.

நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றியக் குழு கவுன்சில் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என, நரிக்குடி யூனியன் ஆணையாளர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினார் .

இதன் அடிப்படையில், ஊராட்சி ஒன்றிய ஒன்றிய நிர்வாக நலன் கருதியும், ஒன்றியக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு நரிக்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ரவிச்சந்திரனை பொறுப்புதலைவராக செயல்பட, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!