காரியாபட்டி அருகே சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகவிழா

காரியாபட்டி அருகே சாய்பாபா  கோவிலில்  வருடாபிஷேகவிழா
X

காரியாபட்டி அருகே சாய்பாபா கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் நடந்த சிறப்பு பூஜை

விருதுநகர் அருகே காரியாபட்டி அருகே சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகவிழா நடைபெற்றது

காரியாபட்டி அருகே சாய்பாபா கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நரிக்குடி சாலையில் அமைந்துள்ள குபேரசாயி சாய்பாபா கோவில் 5ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி பூஜை, சிறப்பு யாக சாலை பூஜை நடைபெற்றது.

பூஜை செய்யப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சாய்பாபாவுக்கு பூஜை ஆராதனை நடத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தி/ல் அமைந்துள்ள மஹாகணபதி, பாலமுருகன், வெங்கடாஜபதி, மகாலட்சுமி, குரு ராகவேந்திரா சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்பட்டது.விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குபேர சாயி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்