காரியாபட்டி அருகே அற்புத ஏ.ஜி. சபை சார்பில் முப்பெரும் விழா

காரியாபட்டி அருகே அற்புத ஏ.ஜி. சபை சார்பில் முப்பெரும் விழா
X

காரியாபட்டி அருகே,நடந்த முப்பெரும் விழாவில்  பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது.

காரியாபட்டி அருகே அற்புத ஏ.ஜி. சபை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கல்லூரணியில், அமைந்துள்ள அற்புத ஏ.ஜி.சபை சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, பாஸ்டர் ஸ்டான்லி தலைமை வகித்து சிறப்பு தேவசெய்திகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தேவ ஊழியத்தின் 28வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, பாஸ்டர் ஜேக்கப் ஜம்புலிங்கத்திற்கு சபை விசுவாசிகள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், பாஸ்டர்கள் ஜோசுவா கண்ணன், களப் ரூபன், ஜீவானந்தன், சற்குணம், காரியாபட்டி எஸ்.பி. எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முப்பெரும் விழா ஏற்பாடுகளை, பாஸ்டர். சார்லஸ், சர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

நரிக்குடி உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியர் தின விழா

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ.முக்குளத்தில் இயங்கிவரும் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில், ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, சுரபி அறக்கட்டளை தலைவர் விக்டர் தலைமை வகித்தார்.


வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சுரபி அறக்கட்டளை சார்பாக உண்டு உறைவிடப் பள்ளிக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது. வளமைய ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, பயிற்றுநர்கள் ராஜசேகர், மேகலா, மற்றும் உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா