காரியாபட்டி பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதி ஏற்பு

காரியாபட்டி பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதி ஏற்பு
X

 விருதுநகர் அருகே, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில், தொழில்துறை அமைச்சர் .தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ-மாணவிகள் வாசித்து உறுதிமொழி ஏற்றனர்

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ-மாணவிகள் வாசித்து உறுதிமொழி ஏற்றனர்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அதை மாணவ-மாணவிகளும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர். போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி, விருதுநகர் அருகே, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில், தொழில்துறை அமைச்சர் .தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story
ai solutions for small business