விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய தனியார் நிறுவனம்

விழுப்புரத்தில் முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய தனியார் நிறுவனம்
X

கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட் விழுப்புரம் கிளை சார்பில் முன் கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது

விழுப்புரத்தில் இயங்கி வரும் கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட் விழுப்புரம் கிளை சார்பில் முன் கள பணியாளர்களுக்கு நல உதவிகள்

கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிமிடெட் சார்பில் முன்கள பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் நேதாஜி தெருவில் உள்ள நிறுவனத்தின் விழுப்புரம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் வட்டார அலுவலர் டி.சரவணன் தலைமை தாங்கி, விழுப்புரம் நகரத்தில் செய்தித்துறையில் பணியாற்றும் கொரோனா முன்களப்பணியாளர்கள் 40 பேருக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்.

கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. இனி வருகின்ற காலங்களில் கொரோனா காலத்தில் தடுப்பூசி தவறாமல் போட்டு கொண்டு முக கவசத்துடன் முன் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக கிளை மேலாளர் பணி.பெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சியில் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்