உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி

உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி
X
விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு எஸ்பி அலுவலகம் உதவி செய்கிறது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவிக் காவல் ஆய்வாளா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இந்தத் தோ்வுக்கு மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது. இந்த உதவி மையம் நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் விண்ணப்பம் செய்வது தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி செய்வாா்கள்.மேலும், நேரில் வர இயலாதவா்கள் 04146 - 220129 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டும் இணையம் வழியாக விண்ணப்பம் செய்வது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்டக் காவல் துறை தெரிவித்தது உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!