ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு அளித்த விழுப்புரம் எம்எல்ஏ

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு அளித்த விழுப்புரம்  எம்எல்ஏ
X

ஊரடங்கில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் உணவு வழங்கினார்.

விழுப்புரம் தொகுதியில் ஊரடங்கில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் உணவு வழங்கினார்.

தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகளும் இயங்காத காரணத்தால், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் பகுதியில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் உணவு கிடைக்காமல் பணியாற்றி வந்தனர்.

இதனை கேள்விப்பட்ட எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தானே நேரில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!