விழுப்புரம் ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

விழுப்புரம் ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
X
Today Crime News In Tamil - விழுப்புரம் அருகே ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Today Crime News In Tamil - விழுப்புரம் அருகே ஆயந்துார் பஸ் நிறுத்தம் அருகே தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுச்சேரி தவளகுப்பம் சானாம்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு (வயது20), கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி புதுகடையை சேர்ந்த ஜெயமூர்த்தி (வயது22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 2 பேரும் கடந்த வருடம் விழுப்புரம் அருகே காங்கியனூரை சேர்ந்த மீன்வியாபாரியான சுரேஷ் என்பவரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி ரூ.3 ஆயிரம் பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் காணை போலீசில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து விஷணு, ஜெயமூர்த்தி ஆகிய 2 பேரையும் காணை போலீசார் கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!